மீண்டும் எரிவாயு வெடிப்பு - முல்லைத்தீவில் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்து

Prasu
2 years ago
மீண்டும் எரிவாயு வெடிப்பு - முல்லைத்தீவில் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்து

நாட்டில் எரிவாயு இல்லாது மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலைமையில் மக்கள் அச்ச நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்

இந்நிலையில் முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் இன்று நண்பகல் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

செல்வபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. சமையலில் ஈடுபட்டவர் அடுப்புக்கு அருகில் இல்லாத காரணத்தினால் அவர் எந்தவிதமான காயங்கள் அல்லது சேதங்கள் இல்லாமல் தப்பியுள்ளார்.

எரிவாயு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலும் எரிவாயு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்களும் பதிவாகின்றமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!