சேதனப் பசளை உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Keerthi
2 years ago
கிளிநொச்சி, செல்வா நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதன் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக ஆராய்ந்தார்.
கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தினை அமுல்ப்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி மக்களுக்கு நிலைபேறான பொருளாதார நலன்களை பெற்றுக் கொடுப்பதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய விஜயத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://fb.watch/bHqJU7hrfa/