கதிர்காமம் தேவாலயத்தின் தங்க தகடு காணாமல் போனமை தொடர்பில் நால்வரிடம் வாக்குமூலம்

Prathees
2 years ago
கதிர்காமம் தேவாலயத்தின் தங்க தகடு காணாமல் போனமை தொடர்பில் நால்வரிடம் வாக்குமூலம்

கதிர்காமம் தேவாலயத்திற்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய தங்கத் தகடு காணாமல் போனமை தொடர்பில் அதன் பாதுகாவலர்கள் நால்வரிடமிருந்து (கபு மஹத்தயா) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

திருடப்பட்டு, பின்னர் தேவாலயத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தங்கத் தகடு உண்மையான பொருளா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

அந்தத் தங்கத் தகடு காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி காணாமல் போன தங்கத் தகடு போன்ற தங்கத் தகடு ஒன்றை என்.எம்.ஜி.அஜித் புஸ்பகுமார என்ற நபர் கொண்டு வந்து கதிர்காமம் தேவாலயத்தின் நிர்வாகச் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

மறைந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி அங்கொட லொக்காவின் மனைவியினால் 2019 ஆம் ஆண்டு கதிர்காமம் தேவாலயத்திற்கு வழங்கப்பட்டது. தங்கத் தகடு காணாமல் போனதை அடுத்துஇ கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரும் அவளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

கதிர்காமம் தேவாலயத்திற்கு அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தகடு 21 கெரட் தங்கத்தால் செய்யப்பட்டதாகவும் 36 சவரன் எடை கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவாலய சேமிப்புக் கிடங்கிற்குப் பொறுப்பான பல கபு மஹத்தையாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!