9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது

Prasu
2 years ago
9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

டிரக்கில் இருந்த நபரை போலீசார் வெளியேறச் சொல்லி சோதனை செய்தபோது, அந்த நபர் அணிந்திருந்த ஜாக்கெட், பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் சுமார் 52 பையில் அடைக்கப்பட்டிருந்த 9 பாம்புகள், அரிய வகை 43 கொம்பு பல்லிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஊர்வனங்களை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!