விரைவில் சுவிட்சர்லாந்தில் 5 பிராங்குகளைத் தாண்ட‌ப்போகும் பெற்றோல் டீசல் விலை!

Prabha Praneetha
2 years ago
விரைவில் சுவிட்சர்லாந்தில் 5 பிராங்குகளைத் தாண்ட‌ப்போகும் பெற்றோல் டீசல் விலை!

ஆம் உலகமே ரஷ்யாவையும், உக்ரைனையும் அண்ணாந்து பார்த்த வண்ணம் இருக்கிறது.

கொரோனாவின் ஆட்டம் சற்று குறைந்து தூங்கச்செல்லும் வேளையில். இவர்களின் போரால் ரஷ்யா உக்ரைன் மக்கள் மட்டுமல்லாமல் அவர்களோடு பொருளாதார வர்தகத்தை மேற்கொள்ளும் நாட்டு மக்களின் வாழ்க்கை பெரிய மரதன் ஓட்டம் ஆகிவிட்டது.

அது மட்டுமல்லாமல், இரு நாடுகளை மையமாக கொண்ட மற்றும் ஏற்றுமதியாகும் அனைத்துப் பொருட்களும் வைர விலையை தாண்டும்போல தெரிகிறது.

அந்த வகையில் பெற்றோலியம் அதிகமாக அரபு நாடுகளை மையமாக கொண்டிருந்தாலும் கணிசமான அளவு இவ்விரு நாடுகளில் இருந்தும் விநியோகமாகிறதாம். அதன் காரணமோ என்னவோ உலக நாடுகளில் பெற்றோலியம் பெரும் தட்டுப்பாடாக உள்ளது. உணவுப்பொருட்கள் ஒரு புறமாக இருந்தாலும், பெர்றோலியமே உலகில் பல விரைவான வாழ்க்கை ஓட்டத்தில் பங்கு வகிக்கிறது. 

அவ்வகையில் சுவிசில் நாளுக்கு நாள் பெற்றோல், டீசல் விலை உயர்ந்துகொண்டு செல்கிறது. இப்படியே போகுமாகவிருந்தால் 5 பிராங்குகளைத் தாண்டுமென ஒரு பெற்றோல் இறக்குமதியாளர் தெரிவித்தார்.
இச்செய்தி லங்கா4.கொம் செய்திக்காக சுவிசிலிருந்து - ரவி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!