வடக்கு மீனவர்களுக்கு உதவிப் பொருட்கள் இன்று வழங்கிவைத்தார் இந்தியத் தூதுவர்

#Jaffna #Douglas Devananda #Fisherman
Prasu
2 years ago
வடக்கு மீனவர்களுக்கு உதவிப் பொருட்கள் இன்று வழங்கிவைத்தார் இந்தியத் தூதுவர்

இந்திய அரசால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார்.

600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இந்நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு இதனைத் சம்பிரதாயபூர்வமாக இந்தியத் தூதுவர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத்  துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தூதரக அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் சுதாகரன் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!