ரூபவாஹினி லோகோவில் இருமொழிகள் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? ஊடக அமைச்சர் விளக்கம்

#Dallas Alagaperuma
Prasu
2 years ago
ரூபவாஹினி லோகோவில் இருமொழிகள் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? ஊடக அமைச்சர் விளக்கம்

இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் நேத்ரா தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை காலமும் தமிழ் மொழியே அறவே தெரியாத ஒருவரே அங்கு பொறுப்பாளராக இருந்து வந்துள்ளாா்.

இதனை அவதானித்த நான் உடனடியாக அங்கு கடமையாற்றும் நிலாா் எம். காசிமை தமிழ் சனலின் பொறுப்பளராக நியமித்துள்ளேன். என இன்று கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய ஊடக அமைச்சா் டலஸ் அழகப்பெரும தெரிவித்தாா்.

மேலும் அமைச்சா் அங்கு உரையாற்றுகையில் -

ஊடகவியலாளர் றிப்தி அலி அடிக்கடி என்னிடம் ரூபவாஹினி சின்னம் (லோகோ)அடையாலத்தில் மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்த ருபாவாஹினி என்ற வசனத்தில், தற்போது சிங்களமொழியில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது என எனது அமைச்சரவை செய்தியாளா் மாநாட்டில் கேள்வி எழுப்புவாா்.

அவ்வாறில்லை. சிங்கள சனல் சிங்கள மொழியிலும்,நேத்ரா சனல் தமிழிலும், ”ஜ ”சனல் ஆங்கிலத்திலும் வெவ்வேறாக லோகோவுடன் ஒழிபரப்படும் மொழி இருத்தல் வேண்டும் என பணிப்பாளா் சபை தீர்மாணித்திருந்தது.

இலங்கை பத்திரிகை சங்கத்தில் கூட தமிழில் பத்திரிகை முறைப்பாட்டினை எழுதுவதற்கும் அங்கு அதிகாரிகள் இல்லை.ஆகவே தான் இவற்றுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கும் பணிப்பாளா் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

நான் ஊடக அமைச்சராக பாரம் எடுத்து 24 மணித்தியாலயத்துக்குள் என்னிடம் அமைச்சா் அலி சப்றியும் பாராளுமன்ற உறுப்பிணாா் மரிக்காரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் முஸ்லிம் சேவையை ஏன் மூடிவிட்டாா்கள் எனக் கேள்வி எழுப்பினாா்கள்.

உடன் இலங்கை ஒலிபரப்பு அதிகாரிகளிடம் இவ்விடயம் பற்றி வினவியபோது கல்வி நிகழ்ச்சிக்காக முஸ்லிம் சேவையை மூடியதாக தெரிவித்தாா்கள். அடுத்த நாளே மீண்டும் அச் சேவை இயங்கியவாரே முஸ்லிம் சேவையை ஆரம்பியுங்கள்.

உலகில் உள்ள சகல நாடுகளிலும் ஊடகத்துக்கென தனியான பல்கலைக்கழகங்கள் கூட உள்ளன ஆனால் எமது நாட்டில் அவ்வாறனதொறு ஊடக கற்கை நிலையம் இல்லை.

அதனைக் கருத்திற் கொண்டு இந்த நாட்டில் உள்ள ஊடகம் சம்பந்தமான பல்கலைக்கழகம் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவா்களை கொண்டதொரு அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளேன்.

அவா்கள் கடந்த மாதம் கூடி இவ் விடயமாக ஆராய்ந்தாா்கள் மிக விரைவில் தனியான அரச ஊடகக் கற்கை நிறுவனமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதில் முஸ்லிம் மீடியா போரத்தின் பிரநிதிகள் அடுத்த கூட்டத்தில் கலந்து தமது கருத்துக்களயும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும் . என ஊடக அமைச்சா் கூறினாா்.

இங்கு விசேட உரை நிகழ்த்திய கலாநிதி ரஸ்மின் கூறிய கருத்தினையே நானும் மீண்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். அதாவரு எமது - இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நான் ஓர் சிறந்த பௌத்தனாகவும், சிறந்த ஹிந்துவாகவும், சிறந்த முஸ்லிமாகவும். சிறந்த கிரிஸ்த்தவராகவும் வருவதற்கே எமது நாட்டில் பாடசாலைகளிலும் ஒவ்வொறு பிரஜையினதும் சிந்தனை உள்ளது.

ஆனால் நான் ஒரு சிறந்த இலங்கையன் அல்லது ஸ்ரீலங்கன் என்ற சிந்தனை இல்லை. எனவும் அமைச்சா் கூறினாா்.

இன்று உலகில் அரசியல் தலைவா்களையும் . அரசாங்கத்தினையும் ஆட்சிக்கு கொண்டு வருவது அரசியல் கட்சிகள் அல்ல ஊடக நிறுவனங்கலேயாகும்.அந்த ஊடக நிறுவனங்களின் தலைவா்கள். அவைகள் இலக்ரோணிக் ஊடகம், சமூக ஊடக வலைத்தளங்கள், அல்லது பத்திரிகைகளாகவும் இருக்க முடியும்.

இவ் , ஊடக நிறுவனங்களுக்கு முடியும் ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்ப்பதற்கும், ஆட்சியளானை பதவியில் அமா்த்துவதற்கும். அவா்கள் சிறந்த அல்லது பிழையான தகவல்களைக் கொண்டு சென்று மக்களது மனநிலையை மாற்றமுடியும்.

ஆகவே தான் இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் சட்டம் பற்றி அன்மையில் அமைச்சா்களான அலி சப்றி , நாமல் ராஜபக்ச ஆகியோா்களுடன் பேச்சுவாா்த்தினை நடத்தினேன். இந்த நாட்டில் ஊடகவியலாளா்கள் சுதந்திரமாக தனது பேனாவைப் பாவிப்பதற்கு ஊடகச் சுதந்திரம் இந்த நாட்டில் இருத்தல் வேண்டும. நான் ஓரு பத்திரிகையாளனாகவே எனது தொழிலை ஆரம்பித்தேன்.

நான் ஒருபோதும் நாம் எழுது பேனாக்களுக்கு தடைவிதிக்கப்போவதில்லை. இந்த அமைச்சு எனக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.அதனை எவ்வித தடங்களுமின்றி சீராக எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. ஆகவே தான் ஊடகவியலாளா்களுக்குரிய ஊடகச் சுதந்திரம் உள்ளது.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் உள்ள முஸ்லிம் சேவையின் பணிப்பாளா் , ஊழியா்கள், மற்றும் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் வழங்கி வரும் விளம்பரங்கள் நோன்பு மாதத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்திற்கு வழங்கிவரும் விளம்பர அனுசரனை நிகழ்ச்சிகள் பற்றியும் அமைச்சருக்கு எடுத்துக் கூறினாா். முன்னாள் அமைச்சா் காலம் சென்ற பதியுத்தீன் மஹூமுத். முஸ்லிம் சேவையை ஆரம்பித்தாா். அதன் பிறகு காலம் சென்ற அலவி மௌலானா ஊடக அமைச்சராக இருந்த காலத்திலும் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் விஸ்தரிக்கப்பட்டது கடந்த காலங்களில் அச் சேவைக்கு 5 க்கும் மேற்பட்ட பணிப்பாளா்கள் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ளாா்கள். ஆனால் கடந்த பல வருடங்களாக அந்தச் சேவைக்கென்று ஒரு தனியான பணிப்பாளா் நியமிக்கப்படவில்லை. இதனை கடந்த அரசில் இல்லாமல் செய்தது பற்றியும் எங்களது அமைப்பு ஊடக அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சா் மங்கள சமரவீரவிடவும் இவ் விடயத்தினை தெளிவுபடுத்தியதாகவும்.இதுவரை இப் பதவி நிரப்பப்படவிலலை என்ற விடயத்தினையும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினாா்

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம மீடியா போரத்தின் 25வது ஆண்டினை முன்னிட்டு மீடியா டிரக்ரி ஒன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் தொழில் சாா் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையளருமான கலாநிதி எம்.சி.ரம்ஸின் ஊடகமும் முஸ்லிம்களின் எதிா்காலமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

அத்துடன் இலங்கை ஊடகவியலாளா்கள் எதிர்நோக்கும் சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் தொழில்சாா் சலுகைகள் .நலன்புரி நடவடிக்கைகள் தொடா்பில் எதிா்கொள்ளும் சவால்கள் தொடா்பில் மீடியா போரத்தினால் தயாரிக்கப்பட்ட ஆய்வரிக்கைகள் அமைச்சருக்கு கையளிக்கப்பட்டது.

இந் மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பிணரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி கௌரவ அதிதியாக கலந்து கொண்டாா்.

இவ்வருடத்தின் மீடியா போரத்தின் தலைவியாக 22 வருடங்களுக்குப் பிறகு சிரேஸ்ட ஊடகவியலாளா் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் சேவையாற்றியவரும் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான ஜனாபா புர்ஹான் பீ இப்திகாா் புதிய தலைவியாகவும், ஊடகவியலாளா் பிஸ்ரின் மொஹமட் செயலாளராகவும்.

பொருளாளராக ரொயிட்டர் செய்தி சேவையி்ன் ஊடகவியலாளா் சிஹார் எம். அனீஸ், மற்றும் 18பேர் கொண்ட நிர்வாக உறுப்பிணா்களும் தெரிபு செய்யப்பட்டனா். அத்துடன் நிர்வாக குழு அடுத்த கூட்டத்தில் கூடி முன்னாள் தலைவா் என். அமீன் அவா்களை போசகராகவோ அல்லது தவிசாளாா் பதவியை ஏற்படுத்திக் கொள்ளவும் முடிபு செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!