சில நாட்களுக்கு முன்னதான சாதனையை மீண்டும் இன்று தங்கத்தின் விலை முறியடித்துள்ளது.
#SriLanka
#Dollar
#prices
Mugunthan Mugunthan
2 years ago
உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை முதல் தடவையாக 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக ஹெட்டிவிதிய தொடர்புடைய தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் 24 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாக இருந்த அதேவேளை 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 139,000 ரூபாவாகும்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலவும் சர்ச்சைக்குரிய முறுகல் நிலையே தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது.இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் இன்றைய விலை $1974.71.
நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டாலர்களாக இருந்தது.