அராபிய வசந்த பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் - ஜனாதிபதி எங்கிருந்தாலும் காலக்கெடு வழங்குவோம்
பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரு மாதத்திற்குள் தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காணவேண்டும் என கால அவகாசத்தை வழங்கிய பின்னர் அராபிய வசந்த பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஒருமாதகால அவகாசத்தை வழங்குவது குறித்த எங்கள் அறிவிப்பையும் அராபிய வசந்த பாணியிலான ஆர்ப்பாட்டங்கள் குறித்த அறிவிப்பையும் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது உத்தியோகபூர்வமாக வெளியிடுவோம், என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஜனாதிபதியை தேடி கொழும்பிற்கு பேரணியாக வருவோம்,ஜனாதிபதி எங்கிருந்தாலும் அவருக்கு காலக்கெடுவை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேவிபி உட்பட அனைத்து கட்சிகளும் எங்களை விமர்சனம் செய்யாமல் எங்களுடன் இணையவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் கண்டணப்பிரேரணையை கொண்டுவரவேண்டிய தேவை எழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.