வைத்தியர் ஒருவரின் வீடு உட்பட 14 வீடுகளில் திருடிய 22 வயது நபர் சிக்கியது எப்படி?

Prathees
2 years ago
வைத்தியர் ஒருவரின் வீடு உட்பட 14 வீடுகளில்  திருடிய 22 வயது நபர் சிக்கியது எப்படி?

மாலபேயில் அரச நிறுவனமொன்றின் தலைவர் பதவியை வகிக்கும் வைத்தியர் ஒருவரின் வீடு உட்பட 14 வீடுகளில் புகுந்து 5 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள், கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான உள்ளாடைகள், வெளிநாட்டு நாணயங்கள், வீடுகளை உடைப்பதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 9ஆம் திகதி மாலபே ரொபேட் குணவர்தன மாவத்தையில் உள்ள தலைவரின் இரண்டு மாடி வீட்டிற்குள் நுழைந்து சுமார் 300,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வரும் போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த வீட்டில் தலைவரும் அங்கிருந்தவர்களும் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் சுவர் ஏறி குதித்து தோட்டத்திற்குள் பிரவேசித்துள்ளார்.

சந்தேகநபர் வீடு அமைந்திருந்த தோட்டத்துக்குள் பிரவேசித்த சிசிடிவி கமெரா மூலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் அப்பகுதியில் உள்ள மேலும் நான்கு வீடுகளுக்குள் அன்றைய தினம் புகுந்து இரண்டு வீடுகளில் உள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளார்.மற்ற இரண்டு வீடுகளில் இருந்தவர்கள் விழித்தெழுந்ததையடுத்து சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மாலபேயில் 3 வீடுகள், தலங்கமவில் 4 வீடுகள்இ கடவத்தையில் 2 வீடுகள், சபுகஸ்கந்தவில் 3 வீடுகள், வெலிவேரிய மற்றும் ராகமவில் தலா ஒரு வீடுகள் உடைக்கப்பட்டு சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மாலபே வைத்தியர் மற்றும் இரண்டு வைத்தியர்களின் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் பிணையில் வெளிவந்த சந்தேக நபர், அதன் பின்னர் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் அனைத்தும் இரவு நேரத்தில் நடந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!