ரஷ்ய அதிபருக்கு எதிராக போராடியவர்கள் 800 பேர் கைது.!!
Keerthi
2 years ago
ரஷ்ய நாட்டில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படுகின்ற ராணுவ நடவடிக்கையை கண்டித்து மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொந்த நாட்டு மக்களும் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தலைநகர் மாஸ்கோ மற்றும் ரஷ்ய அதிபரின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் உள்ளிட்ட 37 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 817 பேரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக போராடியதாக ஏறத்தாழ 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.