வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் டம்மிக்கு பிறந்தநாள் கேக்கை ஊட்டிய நண்பர்கள்

Prathees
2 years ago
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் டம்மிக்கு பிறந்தநாள் கேக்கை ஊட்டிய நண்பர்கள்

ரஞ்சன் ராமநாயக்கவின் பிறந்தநாளை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக அவரது நண்பர்கள் வித்தியாசமான பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் விடுவிக்கப்படாததால், ரஞ்சன் இல்லாமல் அவரது அட்டை டம்மியை வைத்து கேக் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

2017ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஞ்சன், நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதனையடுத்துஇ நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி, நீதித்துறையை அவமதித்ததாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மகல்கந்தே சுநந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர் சுனில் பெரேரா ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!