ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்த சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வின் போதுஇ இலங்கைக்கு சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவையும் அனுதாப அணுகுமுறையையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளைஇ முடிவுகள் சார்ந்த பன்முகக் கூட்டாண்மையாக மாற்றுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிவிவகார அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய நிலையில் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் வலுவான உறவுக்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.