உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க மறுத்த ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் வைத்து நேரில் பேச தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
முன்னதாக அதிபர் புதின் இது போன்ற பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் "ஜெலன்ஸ்கியை சந்திக்க விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவை புதின் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் தொலைபேசியில் பேசியபோது தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் உக்ரைன் ரஷ்யா அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.