அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று!

Keerthi
2 years ago
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று!

தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு நாட்களாக தனக்கு தொண்டையில் லேசான அரிப்பு இருந்து வந்ததாகவும், கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் நன்றாக இருப்பதாக உணர்வதாகவும், தானும், தன்னுடைய மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவிக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும், நோய்த்தொற்றுகள் குறைந்து வந்தாலும், நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால், தடுப்பூசி போட வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

\

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!