பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயர்தர மாணவன் மரணம்
கடந்த 13ஆம் திகதி மதியம் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
உயிரிழந்தவர் பொகவந்தலாவ புனித மரியாள் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 13 வயதுடைய பாரத் தர்ஷன் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி பொகவந்தலாவ புனித மரியாள் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை காண செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாணவன்இ 13ஆம் திகதி பிற்பகல் வரை வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர்.
கிரிக்கெட் போட்டியை பார்க்க பரத் தர்ஷன் வரவில்லை என அவரது நண்பர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து,
வீட்டைச் சுற்றி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில்இ வீட்டின் அருகே உள்ள பயன்படுத்தப்படாத 6 அடி ஆழமான கிணற்றில் உடல் தலைகீழாகவும்இ இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் சடலத்தை கண்டுள்ளனர்.
குறித்த சடலம் பாரத் தர்ஷனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.