உலகில் முதன்முதலாக உண்ணும் புடவையை தயாரித்த பெண்!

#world_news
Nila
2 years ago
உலகில் முதன்முதலாக உண்ணும் புடவையை தயாரித்த பெண்!

உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்துள்ளார்.

கேரளாவில் கொல்லம் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் ஜார்ஜ். தொழில் ரீதியாக உயிரியல் ஆராய்ச்சியாளராக உள்ள இவர், சமீபத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.

ஃபேஷன் டிசைனிங் மற்றும் உணவு தயாரிப்பில் ஆர்வம் கொண்ட இவரின் மலர் மற்றும் பேக்கிங் முயற்சிக்கு பின்னே ஒரு கதையும் இருக்கின்றதாம். ஆம் எலிசபெத் ஜேக்கப் பேக்ஸ் (இது வடிவமைப்பாளர் கேக்குகளை உருவாக்குகிறது) மற்றும் ஜேக்கப் ஃப்ளோரல்ஸ் (நிகழ்வுகளுக்கான கைவினைப் பூக்கள்) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.

இந்த தொழிலின் கதை என்ன?

ஜேக்கப் என்பவர் குறித்த பெண்ணின் தாத்தா ஆவார். இவர் 33 வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு பேக்கரி வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது.

விபத்தில் தாத்தா உயிரிழந்ததால் அவரது நிறைவேறாத ஆசையை எலிசபெத் கையில் எடுத்ததோடு, தனது பேக்கிங் மற்றும் மலர் முயற்சிக்கு “ஜேக்கப்” என்று பெயரிட்டுள்ளராம்.

சாப்பிடக்கூடிய புடவை எண்ணம்

இவருக்கு உண்ணக்கூடிய புடவை தயாரிப்பது எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது எனில், மொட்டை மாடியில் தாயின் புடவை காய்ந்து கொண்டிருக்கும் போது, அதனைப் பார்த்து தான் இந்த எண்ணம் தோன்றியதாக கூறுகின்றார்.

எலிசபெத் இதை எப்படி தயாரித்தார் என்பது மிகவும் ஆச்சரியமானது. ஒரே வாரத்தில் இந்த வித்தியாசமான புடவையை எலிசபெத் உருவாக்கியிருக்கிறார்.

எவ்வாறு தயாரித்துள்ளார்?

தனது சொந்த சமையலறையில் புடவையை உருவாக்கிய எலிசபெத், அதற்காக எந்தவொரு, ஆடம்பரமான கேஜெட்டையும் பயன்படுத்தவில்லை.

சமையலறையில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு இந்த சேலையை உருவாக்கினார்.

ஸ்டார்ச் அடிப்படையிலான செதில் காகிதத்தை பயன்படுத்தியிருக்கிறார். உருளைக்கிழங்கிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டார்ச் இந்த காகிதத்தில் உள்ளது.

A4 தாள் அளவிலான செதில் காகிதத்தை 100 தாள்களை பயன்படுத்தி சமார் 5.5 மீற்றர் நீளமுள்ள புடவை உருவாக்கியுள்ளார்.

வேஃபர் தாள்கள் ‘கசவு’க்கான சரியான அமைப்பை அடைய உதவியதுடன், பாரம்பரிய வடிவத்தை உருவாக்க தங்க தூள் பயன்படுத்தியுள்ளார். 2 கிலோ எடையுள்ள இந்த புடவையை உருவாக்க சுமார் 30 ஆயிரம் ரூபாயை செலவு செய்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!