இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்த விடயம்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்த விடயம்!

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றைய தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த கனியவள கூட்டுதாபனத்தின் தலைவர், அதன் பலனை மக்களுக்கு பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நேற்றைய தினம் 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய ஒரு பீப்பாய் ப்ரெண்ட் ரக எண்ணிக்கையின் விலை 5.77 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்து 106.90 அமெரிக்க டொலராக பதிவானது.

இதேவேளை, நேற்றைய தினத்தை போன்று இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!