புதிய பாணியில் கொள்ளையிடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள்!
#Litro Gas
Mayoorikka
2 years ago
பதுளையில் உள்ள சமையல் எரிவாயு முகவர் நிலையமொன்றிலிருந்து 1,64,000 ரூபாய் பெறுமதியான 14 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, திட்டமிட்ட முறையில், ஒருங்கமைக்கப்பட்டு இந்த கொள்ளை முயற்சி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட சமையல் எரிவாயு அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைக்காக ஒதுக்கப்பட்டதாகவும் குறித்த முகவர் நிலைய உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.