இலங்கையில் 2023ல் பாடசாலை கல்வி முடங்கும் அபாயம்?

#SriLanka #School
Nila
2 years ago
இலங்கையில்  2023ல் பாடசாலை கல்வி முடங்கும் அபாயம்?

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அரச அச்சகத் திணைக்களத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடதாசிகளின் விலை இரு மடங்கில் உயர்வடைந்துள்ளமையே, இதற்கான காரணம் என அவர் கூறுகின்றார்.

கடந்த ஆண்டு பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொன் கடதாசியின் விலை 165,000 ரூபா என கூறிய அவர், தற்போது அந்த தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அடுத்த வருடம் முதல் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசகர் M.T.R.அத்துல தெரிவிக்கின்றார்.

கடதாசி தட்டுப்பாடு காரணமாக அரச அச்சகத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி இல்லாமையினால், மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!