பட்டினியால் வாடும் மக்கள் எங்களைத் திட்டுகின்றனர்; கோட்டா நடவடிக்கை எடுக்காவிடின் அரசுக்கு 'குட்பாய்' ஆளுங்கட்சி எம்.பி. லலித் எல்லாவல பகிரங்க எச்சரிக்கை

Prasu
2 years ago
பட்டினியால் வாடும் மக்கள் எங்களைத் திட்டுகின்றனர்; கோட்டா நடவடிக்கை எடுக்காவிடின் அரசுக்கு 'குட்பாய்' ஆளுங்கட்சி எம்.பி. லலித் எல்லாவல பகிரங்க எச்சரிக்கை

"நாட்டு மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் கண்டபடி எங்களைத் திட்டுகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேரில் சந்தித்து, இது தொடர்பில் முறையிடவுள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் அரசுக்குக் 'குட்பாய்' சொல்லுவோம்."

- இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லலித் எல்லாவல.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நான் பிரதேச சபை உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போது மக்கள் என்னைத் திட்டவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். மக்கள் திட்டுகின்றனர். காரணம், மக்கள் நெருக்கடியில் உள்ளனர்.

பட்டினியில் வாழ முடியாது. எனவே, ஜனாதிபதியைச் சந்தித்து இந்த நிலைமையைத் தெளிவுபடுத்தவுள்ளேன்.

பின்வரிசை எம்.பிக்கள் என்போர் அரச புகழ் பாடுபவர்கள் அல்லர். எனவே, ஜனாதிபதியால் காத்திரமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், நாங்கள் முடிவொன்றை எடுக்க நேரிடும். அரசுக்குக் 'குட்பாய்' சொல்லவும் தயங்கமாட்டோம்" - என்றார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!