நெருக்கடி நிலையில் இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்காவின் முக்கியஸ்தர்!
Mayoorikka
2 years ago
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland ) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று(19 ) முதல் எதிர்வரும் 23 வ ஆம் திகதி வரை பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின்போது பொருளாதார, அரசியல் நெருக்கடி மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.