உக்ரைன் போரை நிறுத்த... புடின், இரண்டு வகை கோரிக்கைகள் தெரிவித்துள்ளார்..

#world_news #Russia #Ukraine
உக்ரைன் போரை நிறுத்த... புடின், இரண்டு வகை கோரிக்கைகள் தெரிவித்துள்ளார்..

போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை தொலைப்பேசியில் அழைத்து, உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஷ்யாவின் துல்லியமான கோரிக்கைகள் என்ன என்பதை அவரிடம் கூறியுள்ளார்.

தொலைபேசி அழைப்பு முடிந்த அரை மணி நேரத்திற்கு பிறகு, எர்டோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலின் ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்து விபரித்துள்ளார்.

ரஷ்ய கோரிக்கைகள் இரண்டு வகைகளாகும். முதல் நான்கு கோரிக்கைகள், காலினின் கூற்றுப்படி, உக்ரைனுக்கு மிகவும் கடினமானதாக இல்லை என எடுத்துக்கொள்ளலாம்.

அவற்றில் முக்கியமானது, உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் சேர விண்ணப்பிக்கக் கூடாது. ஆனால், இதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.

அடுத்தது, உக்ரைன் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆயுதக் குறைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உக்ரைனில் ரஷ்ய மொழிக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

உக்ரைன் அனைத்து வகையான நவ-நாசிசத்தையும் கண்டித்து, அவற்றைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்தால் போதுமானதாக இருக்கும் என முதல் வகை கோரிக்கைகள் உள்ளன.

இரண்டாவது வகை கோரிக்கைகள், இந்த விடயங்களில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பு தனக்கும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் தேவை என்று புடின் கூறியுள்ளார்.

ஸெலென்ஸ்கி ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கவும், அவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸின் நிலையை குறிப்பிட்டுச் சொல்லாமல், கிழக்கு உக்ரைனில் உள்ள நிலப்பரப்பை உக்ரைனிய அரசாங்கம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரஷ்யா கோரும் என கலின் அனுமானித்துள்ளார்.

மற்ற அனுமானம் என்னவென்றால், 2014இல் ரஷ்யாவுடன் சட்டவிரோதமாக இணைந்த கிரிமியா, உண்மையில் இப்போது ரஷ்யாவிற்கு சொந்தமானது என்பதை உக்ரைன் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யா கோரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!