ரஷ்யா - உக்ரைன் போரில் 5,000 பேரைக் கொன்ற ரஷியா : மரியுபோல் மேயர் வேதனை

#world_news #Ukraine #Russia
ரஷ்யா - உக்ரைன்  போரில் 5,000 பேரைக் கொன்ற ரஷியா : மரியுபோல் மேயர் வேதனை


உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் ஒருமாதத்துக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. துறைமுக நகரான மரியுபோலில் ரஷியப் படைகள் ஊடுருவலுக்குப் பிறகு 5,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

புச்சாவில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டது என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்காக ரஷியாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரமான மரியு போலில் ரஷியா படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உள்ளன. அங்குதான் அதிகமாக பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட அழிந்து போன இடமாக மரியுபோல் மாறி இருக்கிறது.