நம்பிக்கை பிரேரணையை அரசாங்கம் கொண்டுவர வேண்டும்! ரணில்

Mayoorikka
2 years ago
நம்பிக்கை பிரேரணையை அரசாங்கம் கொண்டுவர வேண்டும்! ரணில்

போராட்டங்கள் நாளுக்கு நாள் வியாபிக்குமாயின், ஜனாதிபதி அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். தான் விலகுவேனா? இல்லையா? என்பது தொடர்பில் மக்களுக்கு ஜனாதிபதியே கூறவேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, விலகவில்லை என்றால், அடுத்த வேலைத்திட்டத்தை முன்வைக்கவேண்டும்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற  சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து​​கொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருக்கும் சிலர், சுயாதீனம் என்று கூறியுள்ளனர். அதேபோல, சிலர் குழுவாக சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ளனர். ஆகையால், நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, நம்பிக்கை பிரேரணையை அரசாங்கம் கொண்டுவந்து நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். அதனூடாகவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்றார்.