இலங்கை மக்களின் போராட்டததை பிளவுப்படுத்த 10 கோடி ரூபாய் - பிரபலம் எடுத்த நடவடிக்கை

Nila
2 years ago
இலங்கை மக்களின் போராட்டததை  பிளவுப்படுத்த 10 கோடி ரூபாய் - பிரபலம் எடுத்த நடவடிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி 10 கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இருப்பதாக பிரபல நடிகை யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நிஷ்சங்க சேனாதிபதி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ரோஹித்த ராஜபக்ச மற்றும் பாடகர் இராஜ் உள்ளிட்ட தரப்பினர் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

விசேட அறிவிப்பு. GotaGohome போராட்டத்தை இரண்டாக பிளவுப்படுத்த நிஷ்சங்க சேனாதிபதி 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இராஜ் மற்றும் ரோஹித்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

5 ஆயிரம் முகநூல் பக்கங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பதிவுக்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.

இந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வேண்டாம். அறிக்கை ஒன்றை செய்து விட்ட சும்மா இருங்கள். அனைவருக்கும் இது பற்றி தெளிவுப்படுத்துவோம். எமது போராட்டம்#GoHomeGota2022 என யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.