நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அலி சப்ரி தயார்

Prabha Praneetha
2 years ago
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அலி சப்ரி தயார்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஆளும் தரப்பு அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் தற்காலிக அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவிவகிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் நாட்டினை மீட்பதற்கான செயற்பாட்டில் பங்கேற்பதற்கு தயாராக இல்லாத நிலையில், இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்று நாடாளுமன்ற பெரும்பான்மையை காண்பிப்பார்களாயின் அவர்களிடத்தில் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் ஆட்சியைப்பொறுப்பு எடுப்பதற்கு தயாராக இல்லையென்றும் நம்பிக்கையில்லாத பிரேரணை மூலமாக அரசியல் இலாபம் அடைவதற்கே முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.