புத்தாண்டு விடுமுறை: விநியோகத்தை ஐந்து நாட்களுக்கு நிறுத்திய லிட்ரோ
Prathees
3 years ago

லிட்ரோ கேஸ் தனது விநியோகத்தை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
முத்துராஜவெல எரிவாயு சேமிப்பு முனையம் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
புத்தாண்டு விடுமுறைக்காக முத்துராஜவெல எரிவாயு சேமிப்பு முனையம் மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில்இ நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் நீண்ட நாட்களாக வரிசையில் நிற்கின்றனர், மேலும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் மீண்டும் 18ஆம் திகதி செயற்படும்.



