இலங்கையின் பொருளாதார நெருக்கடி புத்தாண்டு பொருட்கொள்வனவில் ஆர்வம் காட்டாத மக்கள்!
Nila
3 years ago

இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட்கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்
வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ். நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள், நகை மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்து செல்வார்கள்.
இம்முறை, நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதன் காரணமாகவும், ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பொருட்கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை



