இன்றைய வேத வசனம் 23.04.2022: கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து
ஒரு தாய் மரிக்கும் தருவாயில் இருந்த போது அவரது பிள்ளைகள் அவரைச் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.
அந்த தாய் பிள்ளைகளிடம் நான் ஒரு பொக்கிஷத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன் என்றார்.
பிள்ளைகள் ஆவலுடன் எங்கேயம்மா அந்த பொக்கிஷம் என்று தாயிடம் கேட்க, தாய் அருகிலிருந்த வேதாகமத்தை காட்டி இது தான் அந்தப் பொக்கிஷம் என்றார். அந்த பிள்ளைகளில் ஒருவர் தான் சிகன்_பால்க் .
சிகன் பால்க் வேதத்தை பொக்கிஷமாக கருதி அதை வாசித்து, தியானித்து மிஷனெரியாக தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்கற்றுக் கொண்டு வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.
இந்த அன்பின் புத்தகத்தை, ஆறுதலின் புத்தகத்தை, ஆலோசனையின் புத்தகத்தை நாமும் பொக்கிஷமாக கருதி தினம் தியானிக்கும் போது நம் வாழ்விலும் வெற்றி பெறலாம்.
("வேதத்தை தியானம் செய் சேதம்
வராது உன் வாழ்வில்.")
சங்கீதம் 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.