அரசாங்கத்தின் எந்தவித செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

Reha
2 years ago
அரசாங்கத்தின் எந்தவித செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

தற்போதைய ஜனாதிபதி, அரச தலைவராக செயற்படும் இறுதித் தருணம் வரை, அரசாங்கத்தின் எந்தவித செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தமது நிலைப்பாட்டை அறியப்படுத்தியுள்ளார். அவநம்பிக்கை பிரேரணையிலோ அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள யோசனையிலோ தாம் கையொப்பமிடவில்லை அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த எந்த யோசனைகளுக்கும், ஆதரவாகவோ? அல்லது எதிராகவோ வாக்களிக்கப் போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெருக்கடியில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றில் எடுக்க வேண்டிய 7 செயற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.