யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Nila
2 years ago
யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குடவத்தை – துண்ணாலை, கிழக்கு கரவெட்டியை சேர்ந்த மயூரன் மகிந்தன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளான்.

சிறுவனை உடனடியாக , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!