குளம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு
Prabha Praneetha
2 years ago

முல்லைத்தீவு தீர்த்தக்கரை வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தீர்த்தக்கரை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மனித சடலம் மிதப்பது கிராம மக்களால் இனம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், சடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
இதுவரை சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் கிராம சேவையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



