இன்றைய வேத வசனம்10.05.2022: நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். யோபு 19:23-24
குணப்படுத்தமுடியாத ஒரு அரியவகை மூளைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கரோலின், ஒரு வித்தியாசமான சேவையினால் வாழ்வில் நம்பிக்கையும், நோக்கத்தையும் பெற்றாள். ஒரு தன்னார்வ புகைப்படக்காரராக, கடும் வியாதியுற்ற பிள்ளைகளையும், அவர்கள் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்தார்.
இந்த சேவையின் மூலமாய், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளோடு இருக்கும் விலையேறப்பெற்ற தருணங்கள் புகைப்படமாகின. துயரமான, இன்பமான மற்றும் அழகான எல்லா தருணங்களும் படமாக்கப்பட்டது. அந்த குடும்பங்கள் அனைத்தும், இக்கட்டான தருணங்களிலும் அன்புகாட்டவே தெரிந்துகொண்டதாக அவள் அறிவிக்கிறாள்.
துயரத்தை படம் பிடிப்பதில் சொல்ல முடியாத ஒரு வல்லமை இருக்கிறது. அதின் அழிக்கக்கூடிய வல்லமையும், அதேநேரத்தில் அவற்றின் மத்தியில் இருக்கும் அழகையும், நம்பிக்கையையும் நாம் அனுபவிக்கமுடியும்.
யோபு புத்தகம் முழுமையும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் நடைபெற்ற ஒரு துயரத்தின் புகைப்படம் எனலாம் (1:18-19). பல நாட்கள் யோபுவோடு அமர்ந்திருந்த அவனுடைய நண்பர்கள், அவனுடைய அந்த துயரத்தினால் சலிப்படைந்து, அதை குறைக்கும்பொருட்டு, அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று விளக்குகின்றனர்.
ஆனால் அதில் ஒன்றையும் ஏற்காத யோபு, இந்த துயர நிலையின் அனுபவத்தை சாட்சியாக, “கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (19:24) என்கிறான்.
யோபு புத்தகத்தில், நம் துயரங்களினூடே ஜீவனுள்ள தேவனுக்கு நேரே திரும்புவது உளிவெட்டாகப் பதிந்துள்ளது (வச. 26-27). அவர் நம் வேதனையில் நம்மை தேற்றி, மரணத்திலிருந்து உயிர்தெழுதலுக்கு நம்மை