அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தற்கொலையல்ல... கொலையே: பரிசோதனையில் வெளியான தகவல்

Prathees
2 years ago
அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தற்கொலையல்ல... கொலையே: பரிசோதனையில் வெளியான தகவல்

நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (09) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் முதலில் ‘தற்கொலை’ எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் பிரேதப் பரிசோதனையில் அது ஒரு தாக்குதலால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

கொழும்பில் கோட்டா கோ கமவை தாக்கியவர்களில் சிலர் வீட்டிற்கு தப்பிச் செல்லும் வேளையில் கொழும்பில் இருந்து நிட்டம்புவ நோக்கி பயணித்ததாக இளைஞர் குழுக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும், அவர்கள் நகரின் வழியாகச் சென்ற வாகனங்களை சோதனை செய்து சந்தேக நபர்களை தாக்கினர்.

பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ​​கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் அவரை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் என அடையாளப்படுத்தி தாக்க முற்பட்டுள்ளனர்.

பெரும் கூட்டம் வாகனத்தை சூழ்ந்து கொண்டதுடன், கலவரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உயிர் காக்கும் துப்பாக்கியை பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்தியுள்ளார்.

எம்.பி.இ தனக்கு தொல்லை கொடுக்க வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், துப்பாக்கியை ஏந்தியவாறு தனது மெய்ப்பாதுகாவலருடன் வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார். 

அங்கிருந்து தப்பி ஓடிய அவர்இ அருகில் உள்ள துணிக்கடை கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.

பின்தொடர்ந்தவர்களுடன் மோதல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

அப்போதுஇ ​​குளத்தில் தவறி விழுந்த அவர்கள் பேண்ட்இ சட்டைகளை கழற்றியுள்ளனர்.

அப்போது பொலிஸாரின் விசாரணைகளின் போது அங்கிருந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டதற்கான சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் 57 வயதான அமரகீர்த்தி அத்துகோரல என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மற்றையவர் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் அஹங்கம விதாரணலாகே ஜயத்த குணவர்தன ஆவார்.

உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை சோதனையிட வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 27 வயதுடைய இஹல கமங்கே ஹபிட்டிகம, கலேலிய பகுதியைச் சேர்ந்த ஹர்ஷ நதீஷன் ஜயவீர என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் நேற்று (10ம் திகதி) காலை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்தனர்.

பொலிஸாரின் வழிகாட்டலில் நீதவான் இலக்கம் 02 சடலங்கள் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

மூன்று இளைஞர்களின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நிட்டம்புவ பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 அமரகீர்த்தி அத்துகோரல தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகவில்லை எனவும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் மாலையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு 'தற்கொலை' என்ற விளக்கம் தவறானது என்று முடிவு செய்யப்பட்டது.

எம்.பி.யின் மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்த இளைஞரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.

இளைஞனின் மரணத்தை பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலரே மேற்கொண்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. குற்றவாளிகள் பற்றிய சான்றுகள் இன்னும் தெளிவாக இல்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.