புலனாய்வுத் துறையின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் கோட்டாபய!!

#SriLanka #Sri Lanka President #Lanka4
Shana
2 years ago
புலனாய்வுத் துறையின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் கோட்டாபய!!

இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புலனாய்வுத்துறை முற்றுமுழுதாக செயலிழந்து போயிருப்பதாக தான் தெரிகிறது என பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து அதற்குரிய வியூகங்களை வகுக்க வேண்டியது புலனாய்வுத் துறையின் கடமை. ஒரு சம்பவம் இடம்பெற்ற பின்னர் விசாரணை செய்வது பொலிஸாரின் கடமை.

சம்பவம் இடம்பெற முன்னர் அதனை தடுத்து நிறுத்துவது தான் புலனாய்வு துறையினரின் கடமை. இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புலனாய்வுதுறை முற்றுமுழுதாக செயலிழந்து போயிருப்பதாக தான் தெரிகிறது.

ஆனால் மறுபகுதியில் போராட்டக்காரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலனாய்வுத்துறை செயலிழந்திருக்கிறது, இராணுவத்தினர் எதிர்பார்த்த முக்கிய செயற்பாட்டிலிருந்து விலகியிருக்கிறார்கள், மக்கள் தொடர்பிலே அவர்களது தன்மைகள் மாறியிருக்கிறது என்றால் இந்த செயற்பாடுகள் அத்தனையையும் பார்க்கின்ற போது இராணுவத்தின் போதே முழுமையான நம்பிக்கையும், இராணுவத்தை வைத்தே அனைத்தையும் செயற்படுத்திக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அதிர்ச்சி அல்லது அச்ச நிலை ஏற்பட ஏதாவது சந்தர்ப்பம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

உண்மை தான். ஏனென்று சொன்னால் மகிந்தவை பதவியிலிருந்து விலக்குவதற்கான கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு மாரடைப்பு வந்திருந்தது.

நெஞ்சுவலியிலிருந்து மீண்டு தான் அவர் அந்த கூட்டத்தையே நடத்தியிருந்தார். எனவே மிகப்பெரிய அழுத்தத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.