இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்த நியூசிலாந்து

Prabha Praneetha
2 years ago
இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்த நியூசிலாந்து

லங்கைக்கு உதவிகளை வழங்க நியூசிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதற்கமைய, நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 5 இலட்சம் நியுசிலாந்து டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி எல்லையின்கீழ், இந்த உரம் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அந்த நாட்டு உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஸ் குமார் சதுர்வேதியை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது, இந்தியாவின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.