இன்றைய வேத வசனம் 03.06.2022: தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 03.06.2022: தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்

தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.  சங்கீதம் 42:5

அக்டோபர் விடுமுறையின் போது, நாள்பட்ட வலியுடன் போராடிய நான் சில நாட்கள் அறையிலேயே ஓய்வெடுக்க வேண்டியதாயிருந்தது.

வானத்தின் மேகமூட்டம் போல் என் மனநிலை மாறியது. கடைசியாக என் கணவருடன் அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்த்து மகிழ நான் கிளம்பியபோது, சாம்பல் மேகங்கள் எங்கள் கண்களை மறைத்தன.

ஆனாலும், நிழல் படிந்த மலைப்பகுதிகளையும் மந்தமான அடிவானத்தின் சில புகைப்படங்களையும் நான் எடுத்தேன்.

இரவு முழுவதும் மழை பெய்ததால் நான் ஏமாற்றமடைந்து, நான் எடுத்த டிஜிட்டல் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பெருமூச்சுடன் என் கணவரிடம் கேமராவைக் கொடுத்தேன்.

“ஒரு வானவில்!” நான் எடுத்த புகைப்படத்தில், ஒரு மாலை நேர வானவில் பதிவாகியிருந்தது. சோர்வுற்றிருந்த என்னுடைய ஆவியை புதுப்பிக்க தேவன் அருளிய இந்த நம்பிக்கையின் அடையாளத்தை நான் எப்படி தவறவிட்டேன் (ஆதியாகமம் 9:13-16).

உடல் அல்லது உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் பெரும்பாலும் விரக்தியின் ஆழத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். தேவனுடைய பிரசன்னத்திற்காகவும் அவருடைய அளவற்ற வல்லமையையும் நினைவுகூர்ந்து நம் ஆவி புத்துணர்வு அடைய நாம் ஏங்குகிறோம் (சங்கீதம் 42:1-3). நாம் எவ்வளவு இக்கட்டான சூழலுக்குள் கடந்துசென்றாலும், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரிடத்தில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம் (வச. 4-6).

மோசமான அணுகுமுறைகள் அல்லது கடினமான சூழ்நிலைகள் நம் பார்வையை மங்கச் செய்யும் போது, அவரை நோக்கிக் கூப்பிடவும், வேதத்தை வாசிக்கவும், அவரையே முழுமையாய் நம்பவும் தேவன் நம்மை அழைக்கிறார் (வச. 7-11). நாம் தேவனைத் தேடும்போது, இருள் சூழ்ந்த நேரத்தில் வளைந்து நிற்கும் நம்பிக்கையின் வானவில்லை கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவிசெய்வார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!