இன்றைய வேத வசனம் 21.06.2022: அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்
(தேவன்) அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:4
தன் குழந்தையை பாதுகாக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் போவாள் என்பதை அவள் நிரூபித்தாள். அவளது ஐந்து வயது மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் அலறும் சத்தம் கேட்டது. அவள் வெளியே விரைந்தாள். அங்கே தன்னுடைய மகனை ஒரு புலி பற்றியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
அந்த பெரிய புலி தன் மகனின் மேல் வாயில் தலை வைத்திருந்தது. தன் உள் வலிமை அனைத்தையும் வரவழைத்து, தன் மகனை பற்றியிருந்த அந்த புலியின் தாடையிலிருந்து அவனைக் காப்பாற்ற போராடினாள்.
இந்த தாயின் துணிச்சலான செயல், வேதத்தில் தேவனுடைய உறுதியான அன்பையும் பாதுகாப்பையும் விளக்குவதற்கு தாயின் அன்பை உருவகமாய் பயன்படுத்தியதை நினைப்பூட்டுகிறது.
ஒரு கழுகு தன் குஞ்சுகளை கவனித்துக்கொள்வது போல தேவன் தம் மக்களை அன்புடன் கவனித்து ஆறுதல்படுத்துகிறார் (உபாகமம் 32:10-11; ஏசாயா 66:13). மேலும் தன்னுடைய பிள்ளையோடு இருக்கும் பிரியாத பிணைப்பினிமித்தம், அப்பிள்ளையை போஷிப்பதுபோல, தேவன் தன் ஜனத்தை ஒருபோதும் மறப்பதுமில்லை, அவர்கள் மீதான உருக்கமான இரக்கத்தை ஒருபோதும் எடுத்துப்போடுவதில்லை (ஏசாயா 54:7-8). இறுதியாக, ஒரு பறவை தன் சிறகுகளின் கீழ் தன் குஞ்சுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல, தேவன் தம்முடைய ஜனத்தை “தம் சிறகுகளாலே மூடுவார்.” அவர்களுக்கு “அவருடைய சத்தியம் பரிசையும் கேடகமாகும்” (சங்கீதம் 91:4).
சில நேரங்களில் நாம் தனிமையாக, மறக்கப்பட்டவர்களாய், அனைத்து வகையான ஆன்மீகவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டவர்களாய் உணர்கிறோம்.
தேவன் நம் மீது இரக்க உருக்கமாய் இருக்கிறார் என்பதையும், நமக்காக யுத்தம்பண்ணுவார் என்பதையும் நம்மை அறியச் செய்வாராக.