ரயில் கட்டணத்தை சுமார் 50 சத வீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை
Kanimoli
2 years ago

இலங்கையில் ரயில் கட்டணத்தை சுமார் 50 சத வீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு ஒரு ரயில் 100,000 லீற்றருக்கு மேல் எரிபொருளைப் பயன்படுத்துவதால் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதன் பேச்சாளர் பிரதிப் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன (Gamini Seneviratne) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்திடம் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



