எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
Kanimoli
2 years ago

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதனிக்க முடிகிறது.
இந்த நிலையில், நாளை (27-06-2022) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலக்கம் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.



