ஓட்டமாவடியில் அதிபர்கள், ஆசிரியர்கள் வீதியை மறித்து போராட்டம்
Mayoorikka
2 years ago

பெற்றோல் வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஓட்டமாவடியில் இன்று வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்ட அதிபர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த பாரிய போராட்டம் அதன் தலைவர் எம்.ஐ.செய்னுலாப்தீன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்னால் வைத்து இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று சுமார் இரண்டரை மணிநேரம் வரை தொடர்ந்தது.
இதனால், மட்டக்களப்பு – கொழும்பு வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



