டீசலை மறைத்து வைத்திருந்த மற்றொரு நபரை எஸ்டிஎஃப் போலீசார் கைது செய்தனர்
#SriLanka
#Fuel
#Police
Mugunthan Mugunthan
2 years ago

சட்டவிரோதமான முறையில் 268 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூகொடையில் வைத்து விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பூகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவல, அமுஹேன பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பூகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



