எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கள்ளச்சந்தை மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு

Kanimoli
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கள்ளச்சந்தை மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு

பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கள்ளச்சந்தை மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதாரண மக்கள் எரிபொருட்களை பெறுவதை அவர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரை நேற்று சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

அண்மைய சில நாட்களாக மக்கள் எரிபொருளைப் பெறுவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர். இந்த நெருக்கடிகளுக்கு கள்ளச்சந்தை மாபியாக்களும் காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

இதன்போது எரிபொருள் நிலையங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து, மக்கள் எரிபொருளை பெறுவதை இலகுபடுத்துவதற்காக தங்களால் இயன்றதை செய்வதாக அரச அதிபர் உறுதியளித்ததாக இந்தச் சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!