ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி

Prabha Praneetha
2 years ago
 ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார். நேற்று இடம்பெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்கா ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதறம்காக இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,

biden

800,000 க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில்அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!