ஒரு நாளில் கடவுச்சீட்டை பெற அரிய சந்தர்ப்பம்! மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பு
Mayoorikka
2 years ago

ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.



