லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை விநியோகிக்கும் தாங்கி ஊர்திகளையும் அழைத்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
Kanimoli
2 years ago

லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை விநியோகிக்கும் சகல தாங்கி ஊர்திகளையும் இன்றைய தினம் சேவைக்கு அழைத்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்த நாட்டின் வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் செயிக் மொஹமட் பின் ஹமாட்டை சந்தித்துள்ளார்.
மேலும் இலங்கையின் எரிசக்திதுறை மற்றும் சில துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



