உக்கிரமடைந்த எரிபொருள் நெருக்கடி: இன்று ஆயிரம் தனியார் பஸ்கள் கூட ஓடுவது சந்தேகம்

Prathees
2 years ago
உக்கிரமடைந்த எரிபொருள் நெருக்கடி: இன்று ஆயிரம் தனியார் பஸ்கள் கூட ஓடுவது சந்தேகம்

குறைந்தது ஆயிரம் 1000 தனியார் பேருந்துகள் இன்று (4ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் இயங்குவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடியே இதனை அதிகம் பாதித்துள்ளது என்றார்.

தனியார் பேருந்துகளின் ஓட்டம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய தினம் (03ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் ஆயிரம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்கும் இ.போ.ச டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், பிராந்திய இ.போ.ச டிப்போக்கள் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்குவதை மறுத்து கட்டுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே நேற்று தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும், கொழும்பு மற்றும் அண்டை நகரங்களில் இயங்கும் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!