பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிட்டால் அழையுங்கள்

Mayoorikka
2 years ago
பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிட்டால் அழையுங்கள்

பஸ் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டுமெனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்வதற்கு பயணச்சீட்டு பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், போதிய பணியாளர்கள் இல்லாததால் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றைத் தவிர்க்க மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பண அட்டை ஊடாக பஸ்களுக்கு கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!