IMF உடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளது: ரணில் உரை

Mayoorikka
2 years ago
IMF உடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளது: ரணில் உரை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினோம், ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல, வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்காகவே நாங்கள் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பல்வேறு கட்டங்களின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது எமது நாடு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கே தற்போது அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எமக்கு மாத்திரமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதியை வலுவடையச் செய்யும் நோக்கில் பணம் அச்சிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!